SRI LANKA


 

"காலத்தின் தேவை"-பேராசிரியர் மூக்கையா அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி.

பேராதனைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் புவியியல் துறை பேராசிரியரும் தலைவருமாக பணியாற்றியவரும் கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றியவரும், தற்போது தேசிய சமாதானப் பேரவையின் இயக்குநர்களில் ஒருவருமான, பேராசிரியர் மூக்கையா அவர்கள்வழங்கிய வாழ்த்துச் செய்தி.

 பேராசிரியர் மூக்கையா  
பேராசிரியர் மூக்கையா
கடந்த காலங்களில் குறிப்பாக 1985 முதல் 2009 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை துரதிஷ்டவசமாக ஏற்பட்ட உள்நாட்டு ஆயுத போராட்டம் காரணமாக பெரும் இன்னல்களை அனுபவித்த அனுபவங்களைக் கொண்டது. வேறுபட்ட மொழி, சமயங்களைக் கொண்ட மக்கள் சமூகங்கள் வாழும் பல்வேறு நாடுகளிலும் அந்நாட்டு மக்களிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. அவற்றை பேச்சுவார்த்தைகள் மூலம் கலந்துரையாடி தீர்வுகளை கொண்டு வருவதன் மூலம் மட்டுமே உயிரிழப்புகள் மற்றும் பற்றாக்குறையாக உள்ள வளங்களை அழித்தல் போன்ற நட்டங்களில் இருந்து நாட்டை பாதுகாக்க முடியும். இல்லாது ஆயுத முரண்பாடுகள் தான் தீர்வு என்று செயல்படுவது நாட்டின் அபிவிருத்தியை தடை செய்து மக்களை சொல்லொன்னாத் துயரங்களுக்கு ஆளாக்கிவிடும் பேராபத்திலிருந்து தப்பவே முடியாது.

இவற்றை கவனத்தில் கொண்டு சமாதான வழியில் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்ற கருத்தை அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஊக்குவிக்க வேண்டும் என்ற உயர் நோக்கத்தின் அடிப்படையில் "வேட்டை"தமிழ் சஞ்சிகையும் MEEDIA LINKம் இணைந்து "சிதிஜெயா"என்னும் சஞ்சிகை ஆரம்பிக்கப்படுவது காலத்தின் தேவையாகும். 

-இது நாட்டில் அனைத்து சமூகங்களிடையேயும் சமாதானம் மற்றும் நல்லிணக்க சிந்தனைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று மேற் கொள்ளப்படும் ஏனைய முயற்சிகளையும் வலுப்படுத்தி சிறந்த தீர்வுகளை கொண்டு வருவதற்கு தனது தரப்பிலான பங்கினை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் அதன் பணி வெற்றி அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

Post a Comment

0 Comments