சகவாழ்வுக்கு மக்கள் பன்முகத்தன்மை தேவை. அது மதங்களுக்கு மத்தியில் மாத்திரம் மேற்கொள்ளப்படுவதில்லை. வேலை செய்யும் இடங்கள், வீடு, பொது இடங்கள், பள்ளி போன்ற அனைத்து பல்வகைத்தன்மை பொருந்திய இடங்களிலும் மேற்கொள்ளப்படலாம்.
நேர்மை, சகிப்புத்தன்மை, ஒற்றுமை,மற்றவர்களையும் அவர்களின் கருத்துக்களையும் பொறுத்துக்கொள்ளல் , கடினமான காலங்களில் ஆதரவாக இருத்தல் போன்றவற்றால் ஒரு நல்ல சகவாழ்வை ஏற்படுத்தலாம்.நல்லொழுக்கங்கள் மற்றும் பன்பாட்டு நடத்தைகள் என்பன சகவாழ்வில் இருப்பது அவசியம்.
மேற்கூறியவற்றைப் பொறுத்தவரை, நாம் மற்றவர்களை மதிக்கும்போது, நாம் நம்மை மதிக்கிறோம், ஒருவருக்கு மரியாதை செய்யும் நாம் நமக்கு மரியாதை செய்கிறோம் அவர்களோடு நேர்மையாக இருக்கின்ற போது நாமும் கௌரவப்படுத்தப்படுகிறோம்.
மக்களிடையேயான சகவாழ்வு இல்லாமல் ஆகின்ற போது கடுமையான பிரச்சினைகள் மற்றும் நோய்களை உருவாக்கக்கூடும், இது அவர்களோடு ஒட்டி உறவாடிய பல்வேறு நபர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது, இது கவலை, மனச்சோர்வு, போன்ற கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.மன அழுத்தம் மற்றும் தீவிர மனச்சோர்வு கூட ஏற்படலாம்.
துரதிர்ஷ்டவசமாக இந்த சகவாழ்வு பிரச்சினைகளோடு தற்போது உலகெங்கிலும் பல குடும்பங்கள் வாழ்கின்றன, அவை பெற்றோர் மற்றும் குழந்தைகள், தம்பதிகள், அல்லது மாமி மற்றும் மருமகள் என நீண்டு செல்கிறது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் சகவாழ்வு என்பதை சரியாக புரிந்து கொள்ளலாம்
மற்றவர்களை சுயமாக ஏற்றுக்கொன்டு, ஒருவருக்கொருவர் தொந்தரவு செய்யும் விஷயங்களை இல்லாமலாக்கி , மாற்ற முடியாததை ஏற்றுக்கொண்டு, முன்னோக்கிச் செல்வதே சகவாழ்வாகும்.
எடுத்துக்காட்டாக, ஒரு கட்டிடத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கிடையேயான சகவாழ்வு,பல உறவுகள் வாழ்கின்ற ஒரு கூட்டுக் குடும்பத்தின் சகவாழ்வு,அருகருகில் வசிக்கின்ற இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையிலான சகவாழ்வு.
அதிகாலை வேளையில் எரிச்சலூட்டும் சத்தம் எழுப்புவது அண்டை வீடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்து கொள்வதுடன், அண்டை வீட்டாரும் கூட்டு நடைபாதையில் குப்பைகளை எறிய முடியாது என்பதை அறிந்து கொள்வதும் அவசியம். அது அவருக்கும் அண்டை வீட்டாருக்கும் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும், எவ்வாறு அமைதி என்பது முதலில் உள்ளத்தில் ஏற்படுத்தப்பட வேண்டுமோ அதே போல் சகவாழ்வும் எங்களுடன் அருகில் இருப்பவர்களுடன் முதலில் ஏற்படுத்தப் பட வேண்டும் அவ்வாறு ஏற்படுத்தப்படும் சகவாழ்வே முழு நாட்டையும் சுபீட்சத்தை நோக்கி கொன்டு செல்லும்.






0 Comments